குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை படுகொலை செய்ய முயற்சித்தனர் என குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்த மூன்று ஊடகவியலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2009ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவை கொலை செய்ய முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மூன்று ஊடகவியலாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
மஹிந்த ராஜபக்ஸவின் மைத்துனரான துசித ரணவக்கவிற்கு சொந்தமான தெனியாய நாகல வத்த என்னும் இடத்தில் நிர்மானிக்கப்பட்டு வந்த வீட்டிற்கு அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தமை குறித்த செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு எதிராகவே வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
தயா வெத்தசிங்கஇ சாலிக விமலசேன மற்றும் ரவிந்திர புஸ்பகுமார ஆகியோர் செய்தி சேகரித்துக் கொண்டு திரும்பிய போது காவல்துறையினர் அவர்களை கைது செய்திருந்தனர்.
2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த மூன்று ஊடகவியலாளர்களும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் மீது தொடரப்பட்டிருந்த அனைத்து வழக்குகளிலிருந்தும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது