குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொய் சாட்சியாளர்களை சிறையில் அடைத்து தாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை காப்பாற்றியதாக முன்னாள் பிரதம நீதிரயசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். கடந்த காலங்களைப் போன்று நீதவான்கள் நீதிமன்ற மனோநிலையில் செயற்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு கொலை , ஒரு கொலை முயற்சி ஆகியவற்றில் இருந்து மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக சுமத்தி தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து தாமே அவரைக் காப்பாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலை குறித்த மஹிந்தவிடம் வினவிய போது கொலை இடம்பெறுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் அந்த இடத்தை விட்டு தாம் சென்றதாகவும் அதன் பின்னரே சம்பவம் இடம்பெற்றதாகவும் மஹிந்த பதிலளித்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நட்பு ரீதியில் உதவ வேண்டும் என்ற அடிப்படையில் மஹிந்தவிடம் விபரங்களைக் கேட்டறிந்து, அந்த வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்ததாகத் தெரிவித்துள்ள அவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவு கலைக்கப்பட வேண்டியது ஒன்றாகும் எனவும் அதற்காக தொடர்ந்தும் போராட வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.