குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பல சிரமங்கள் மற்றும் வறுமைக்கு ஊடாக நல்ல கல்வியை பெற்றே சிறந்த தலைவர்கள் உருவாகின்றனா்.எனவே பின்தங்கிய பாடசாலை என்ற மனநிலையை விடுத்து மாணவர்கள் நல்ல கல்வியை பெறவேண்டும் என யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளா் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளாா்.
இன்று 08-02-2017 கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் பிரதம விருந்தினரா கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
தற்போது எல்லாப் பாடசாலைகளிலும் இல்ல மெய்வல்லுநா் திறனாய்வு போட்டிகள் இடம்பெற்று வருகின்றது.ஆனால் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தை பொறுத்தவரை இந்த விளையாட்டுப்போட்டியை மாணவா்களும் அவர்களது பெற்றோா்களும் சந்தோசமாக கொண்டாடிக்கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது. இங்கு மாணவா்களின் எண்ணிக்கையை விட பொது மக்கள் அதிகமாக காணப்படுகின்றது எனத் தெரிவித்த அவர் இது ஒரு செய்தியை சொல்கிறது , அதாவது இந்தப் பாடசாலையின் மீது பெற்றோா்கள் எந்தளவுக்கு கரிசனையாக உள்ளனா் எனத் தெரிவித்த அவா் தற்போது பாடசாலைகள் வெளிச் சமூகத்தோடு பின்னிபிணைந்தாக காணப்படுகிறது எனவும் ஒவ்வொரு பாடசாலைகளின் வளா்ச்சியும் சமூகத்தின் தலைவா்களிடமும் காணப்படுகிறது எனவும் குறிப்பிட்டாா்
இது ஒரு கிராமத்து பாடசாலை, ஒரு பின்தங்கிய பாடசாலை ஆனால் தற்போதைய சூழலில் கிராமத்து நகரத்து பாடசாலைகளுக்கிடையே பெரியளவில் வேறுபாடுகள் இல்லை.நல்ல பெறுபேறுகளை பெறுவதற்கு இவை ஒரு தடையாக இருக்காது எனத் தெரிவித்தர்h.
இதனை தவிர குடும்ப வறுமை காணப்படுகிறது. ஆனால் வறுமையே நல்ல கல்வியை பெறுவதற்கும், நல்ல மாணவா்களை உருவாக்குவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. வசதிகள் அதிகரித்தால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் அனைவருக்கும் தெரியும். வாழ்க்கையில் கஸ்ரப்பட்டு முன்னேறினால் அது எதிர்காலத்ரதில் பெரிய உதவியாக அமையும் என அவர் தெரிவித்தார்.
மாணவா்கள் இது கிராமத்து பாடசாலை பின்தங்கிய பாடசாலை என்று எண்ணத் தேவையில்லை எனவும் மாறாக இது ஒரு முன்மாதிரியான பாடசாலை என்ற எண்ணப்பாட்டோடு சிறந்த மாணவர்களாக விளங்கவேண்டும் என உறுதிஎடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் இருக்கின்ற வளங்களை கொண்டு மிகச் சிறந்த மாணவா்களாக வளரவேண்டும். பின்தங்கிய பாடசாலை, வறுமை என்பன மாணவா்களின் முன்னேற்த்திற்கு தடையாக இருக்க கூடாது. எனவும் தெரிவித்hர். இந்த வறுமை, சிரமங்களுக்கு ஊடாக சிறந்த கல்வியை பெற்று எதிர்காலத்தில் சிறந்த தலைவா்களாக எப்படி உருவாக முடியும் என்பதனை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பாடசாலையின் அதிபர் பெ.கணேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளா் க.முருகவேல், கோட்டக் கல்வி அதிகாரிகள், அயற்பாடசாலைகளின் அதிபா்கள் ஆசியர்கள் பெருமளவான பெற்றோா்கள் என பலா் கலந்துகொண்டனர்