குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்த கால அவகாசம் வழங்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம், இலங்கை அரசாங்கம் கோர உள்ளது. யுத்தக் குற்றச் செயல் விசாரணை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நடத்திய சந்திப்பின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் தேவைப்படுவதாக கோரத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு இலங்கை இணை அணுசரனையுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.