குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதில் தவறில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனம் அமைப்பது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது நல்ல முயற்சியாகவே அமையும் என குறிப்பிட்டுள்ள அவர் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் சாசனத்திற்கு மக்களின் ஆதரவினை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் புதிய அரசியல் சாசனம் உருவாக்கும் முனைப்புக்களுக்கு சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட நல்லாட்சிக்கு உதவிய தரப்புக்கள் அதரவளிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீடிக்க வேண்டுமென கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.