குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொதலாவல பாதுகாப்பு கல்லூரியில் மருத்துவ பீடம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ நடவடிக்கை எடுத்த போது அதனை எவரும் எதிர்க்கவில்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கோதபாயவினால் கொண்டு வரப்பட்ட விசேட உத்தேச சட்ட மூலமொன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு கல்லூரியில் மருத்துவ பீடம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானம் எடுத்த போது மருத்துவ அதிகாரிகள் சங்கமோ அல்லது ஏனைய தரப்புக்களோ நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளர்.
கொதலாவல பாதுகாப்பு கல்லூரிக்கு மருத்துவ பீடம் ஒன்றை அமைப்பது குறித்து எழுந்த சர்ச்சையின் பொது மருத்துவ சபையின் சரத்துக்களை மாற்றியமைத்து கோதபாய ராஜபக்ஸ அனுமதி பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.