163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இணக்கப்பாட்டு கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டில் பிரதான இரண்டு கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் கூடிய நல்லாட்சி நடத்தப்பட்டு வருவதாகவும் எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் இந்த நல்லாட்சி கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் தன்னிச்சையான தீர்மானங்களை எடுப்பதன் மூலம் இந்த விடயம் அம்பலமாகின்றது என டிலான் பெரேரா பதுளை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Spread the love