187
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் திரள வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு அதிக அளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக நுண்ணறிவு பிரிவு பொலீஸார் காவல் ஆணையர் எஸ்.ஜோர்ஜுக்கு தகவல் கொடுத்ததனைத் தொடர்ந்து காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை போலீஸார் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் சாதாரண உடை அணிந்த போலீஸாரும் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் எனவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Spread the love