புதிய அரசியல் சாசனம் அமைப்பதற்கு அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்டவில்லை என அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார். புதிய அரசியல் சாசனம் அமைப்பது குறித்த அரசாங்கத்தின் முனைப்பு குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படும் என கடந்த தேர்தலின் போது மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த விடயம் பற்றிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். எனினும் அரசாங்கம் இதுவரையில் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, புதிய அரசியல் சாசனமொன்று அவசியமில்லை என்ற நிலைப்பாட்டையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வமாக இதுவரையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை
புதிய அரசியல் சாசனம் அமைப்பதற்கு அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்டவில்லை – மனோ கணேசன்
150
Spread the love