குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மால்ப தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான போராட்டத்திற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என முன்னிலை சோசலிச கட்சி அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்கு எதிரான அனைத்து விதமான போராட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என முன்னிலை சோசலிச கட்சி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு அறிவித்துள்ளது.
முன்னிலை சோசலிச கட்சிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மாலம்பே தனியார் பல்கலைக்கழகத்தை ரத்து செய்ய வேண்டுமென இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.
இதேவேளை, மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஆதரவளிக்கப்படும் என ஏற்கனவே ஜே.வி.பி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.