167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டே நீதிமன்றம் இன்றைய தினம் லஹிருவை விடுதலை செய்துள்ளது.
100,000 ரூபா ரொக்கப் பிணையின் அடிப்படையில் லஹிரு விடுவிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் சார் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம் என லஹிருவிற்கு நிபந்தனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 26ம் திகதி முதல் இன்று வரையில் லஹிரு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love