மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி காரணமாக பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையில் ஜனாதிபதி என்ற வகையில் தான் எந்தவொரு தரப்புக்கும் சார்பாக இருக்கப்போவதில்லை என்றும் இவ்விடயத்தில் பக்கச்சார்பின்றி, நடுநிலையாக செயற்பட்டு நியாயத்தை நிறைவேற்றுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி;, இவ்விடயத்தில் தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான திட்டமொன்றைத் முன்வைத்து பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வகுப்பு புறக்கணிப்புக்களில் ஈடுபடாமல் கல்விச் செயற்பாடுகளை தொடருமாறும் அனைத்து மருத்துவ பீட மாணவர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி nமைத்ரிபால சிறிசேன நுவரெலியாவில் 150 வீடுகளைக் கொண்ட ‘ஹூட்வில்புரம்’ கிராமத்தை இன்று (09) முற்பகல் மக்களுக்கு வழங்கியபின் தலவாக்கலை நகர சபை விளையாட்டரங்கில் மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.