175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுன்னாகம் குடிநீர் பிரச்சனை தொடர்பில் உயர் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெறுவதாக முதலமைச்சர் தெரிவித்து இருந்தார். ஆனால் எது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. குறித்த வழக்கு தொடர்பில் எனக்கு தெரியப்படுத்த வேண்டும் என வடமாகான எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்து உள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
சுன்னாகம் குடிநீர் பிரச்சனை தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகள் தொடர்பில் எனக்கு தெரியும் ஆனால் உயர் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.
உயர் நீதிமன்றில் நடைபெறும் வழக்கு தொடர்பில் எனக்கு எந்த விபரமும் தெரியாது. அந்த வழக்கு தொடர்பான தகவல்களை தனக்கு தர வேண்டும் என சி.தவராசா கோரிக்கை விடுத்தார்
Spread the love