குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது அபிவிருத்தி செய்ய முடியாவிட்டால் இன்னும் 15 ஆண்டுகளின் பின்னர் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையை முந்தி செல்லும் என குறிப்பிட்டுள்ள பிரதமர் குருநாகலையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையில் புதிய கைத்தொழில் வலையங்களை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் பாரிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அணுகுண்டு தாக்குதலையடுத்து ஜப்பான், இலங்கையை விட பின்னிலையிலேயே இருந்தது எனவும், தற்போது நாம் அனைத்து நாடுகளிலும் பின்னிலையில் இருப்பதாகவும் நாட்டை தற்போது அபிவிருத்தி செய்யாவிட்டால் ஏனைய நாடுகள் இலங்கையை முந்திச் செல்வதனை தடுக்கவோ தவிர்க்க முடியாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.