தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்துள்ளார். ஸ்டாலினுடன் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் பங்கு கொண்டுள்ளனர்.
ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களும் தமிழகத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. அதேபோல், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை.தமிழக அரசு முற்றிலும் முடங்கி போயுள்ளது.
எனவே ஆளுனரிடம் சட்டப்பேரவை கூட்டத்தை உடனே கூட்டுமாறு கோரிக்கை வைத்ததாகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் நல்ல நிலையை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
சசிகலாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்த ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்களை பயணக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் ஆளுநரிடம் தெரிவித்தாகவும் தெரிவித்தார்.