பேரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Alejandro Toledo சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை லஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளார் எனவும், அவரைக் கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையில் Alejandro Toledo பேருவின் ஜனாதிபதியாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேஸில் நிறுவனமொன்றுடன் இணைந்து நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் போது பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பேருவின் முன்னாள் ஜனாதிபதி Alejandro Toledo தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகி;ன்றர். எனினும் இது குறித்து கருத்து வெளியிட்ட அவர் தாம் எந்தவொரு மோசடியையும் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.