அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயித்துள்ள போதிலும் அந்த விலைகளில் அரிசி விற்பனை செய்யப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நிலைமை காணப்படுவதாகவும், குறைந்த விலையில் அரிசியை கொள்வனவு செய்யும் நோக்கில் சில பகுதிகளில், சதொச விற்பனை நிலையங்களில் மக்கள் வரிசையாக காத்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுகின்றதா என்பது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் நேற்று சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு கிலோ 80 ரூபாவுக்கும், நாடு அரிசி ஒரு கிலோ 72 ரூபாவுக்கும், பச்சை அரிசி ஒரு கிலோ 70 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என கடந்த 8 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது.