பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்துக்கு 15 பேர் உயிரிழந்ததுடன் 90 பேர் காயமடைந்தனர்.
பிலிப்பைன்ஸின் தென்பகுதியான சுரிகாவ் டெல் நோர்டேவை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவாகியது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
நிலநடுக்கத்தின் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் கட்டிங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்க மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 1990-ம் ஆண்டு பிலிப்பைன்ஸின் லுசான் தீவுப் பகுதியில், ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான நில நடுக்கத்தில் 2,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது