சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான தீர்ப்பு இறுதி உச்ச நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன தமிழ்நாட்டில் 1991 முதல் 96 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஜெயலலிதாவுடன் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சுமார் 18 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பினை எதிர்த்து அவர்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் செய்த முறைப்பாட்டினை தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டமையை எதிர்த்து கர்நாடக அரசு மேல் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழக முறையீடு செய்தார். இந்த வழக்கின் இறுதி வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இப்போது இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு செவ்வாய்க்கிழமை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுpகன்றது.