குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைச்சரவையில் தற்போதைக்கு மாற்றம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போதைக்கு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாது எனவும் தேவை ஏற்பட்டால் மட்டும் பின்னர் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் அடிக்கடி சந்திப்புக்களை நடாத்த தீர்மானித்துள்ளன. இரு தரப்பு உறவுகளை சுமூகமாக பேணும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.