181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொழும்பு 7இல் அமைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இல்லத்திற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த குறித்த நபர் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பணியாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தொழில் வாய்ப்பினை மீளப் பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதியை சந்திக்கவே இவர் இவ்வாறு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
Spread the love