தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இருவருக்கும் இடையே நிலவும் அதிகார போட்டி சூழலில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் காவல்துறை ஆணையளளர் ராஜேந்திரனுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
அ.தி.மு.க. தொண்டர்கள் இரு பிரிவாக இருப்பதால் ஆங்காங்கே மறியல் போராட்டங்கள் இடம்பெற்று வருவதுடன் சில குண்டர்கள் சென்னையில் உள்ள விடுதிகளில் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலினைத் தொடர்ந்து பலர் கைதும் செய்ய்ப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சட்டம் – ஒழுங்கு குறித்து காவல்துறை அதிகாரிகளை அழைத்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.