ஓரோவில் அணைய உடையலாம் என்ற ஆபத்து காரணமாக வெளியேறிய கலிஃபோர்னியாவை சேர்ந்த மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை வெளியேறுவதற்கு இட்ட ஆணையை அகற்றுவதற்கு போதுமான அளவு நீர், ஓரோவில் அணையிலிருந்து வடிந்துவிட்டது எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் போதும் அணை உடையலாம் என்ற எச்சரிக்கை தொடர்ந்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணையின் நீர் வடிகால் பகுதி உடையும் அபாயம் தோன்றியதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏறக்குறைய 2 லட்சம் பேர் அவ்விடத்திலிருந்து வெளியேற பணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியாவில் ஓரோவில் அணை உடையும் அபாயம் – மக்கள் வெளியேற்றம்
Feb 13, 2017 @ 10:53
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஓரோவில் அணை(Oroville Dam) உடையும் அபாயத்தில் இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த கலிபோர்னியாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தமை காரணமாக ஆறுகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றதன் காரணமாக ஓரோவில் அணை வலுவிழந்து எந்நேரத்திலும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிக உயரமான அணையான இந்த ஓரோவில் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.