Home இலங்கை உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்குத் தயார் – மஹிந்த ராஜபக்ஸ

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்குத் தயார் – மஹிந்த ராஜபக்ஸ

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உள்ளுராட்சி  மன்றத் தேர்தல்களுக்கு தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களை இன்றைய தினம் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்நோக்குவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது என தெரிவித்துள்ள அவர் தேர்தலுக்கு அஞ்சவில்லை என்றால் அரசாங்கம் எந்த நேரத்திலும் எந்தவொரு தேர்தலுக்கும் தயாராக இருக்க வேண்டும் எனவும் தாம் பதவியில் இருந்த காலத்தில் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்பட்டதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்தை கூட்டு எதிர்க்கட்சி வலியுறுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் தேர்தல் ஆணைக்குழுவொன்று இருக்கின்ற போதிலும் அதில் எவ்வித பயனும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதரவளிக்கின்ற போதிலும் நாட்டை பிளவடையச் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More