148
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் லாகூரில் இன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்ததுடன் 53 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருந்துக்கடை உரிமையாளர்கள் நடத்திய போராட்டப் பேரணி மீது தற்கொலைக் குண்டுதாரி மேற்கொண்ட தாக்குதலில் லாகூர் மாவட்ட காவல்துறை உயரதிகாரி உள்பட 16 பேர் உயிரிழந்ததாகவும், 53 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரும்பாலும் காவல்துறையினரை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love