குளோபல் தமிழ் செய்தியாளர்
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 1300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவ காவல்துறையினரும் காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தியோகபூர்வமாக விடுமுறை பெற்றுக்கொள்ளாதுஇ அல்லது விடுமுறை பெற்றுக்கொண்டு சென்று உரிய திகதியில் திரும்பாத மற்றும் அறிவிக்காமல் கடமையிலிருந்து விலகிக் கொண்டவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் வரையில் முப்படைகளையும் சேர்ந்த 1300 பேரை கைது செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
984 இராணுவப்படையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.