வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்-னின் சகோதரர் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வியட்நாம் நாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டு பெண்ணை மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த கொலையில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருவதாகவும், இவர்கள் வெளிநாட்டை சேர்ந்த ஒரு குழுவின் சதி திட்டப்படி கொலையை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட கொரியா ஜனாதிபதியின் சகோதரர் மலேசியாவில் படுகொலை
Feb 14, 2017 @ 17:37
வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் வட கொரிய ஜனாதிபதி அவ்வப்போது பரிசோதித்து வரும் நிலையில் அவரது சகோதரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.