சரணடைய கால அவகாசம் கோரிய சசிகலாவின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சசிகலா தாம் சரணடைய கால அவகாசம் கோரியதை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் சசிகலா உடனும் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிநிலை ஏற்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்த உச்சநீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையையும் 30 கோடி ரூபா அபராதத்தையும் விதித்திருந்தது.
இந்த நிலையில் நீதிபதிகள் சசிகலாவின் வழக்கறிஞர் இன்று காலை சசிகலாவின் உடல்நிலையை காரணம் சரணடைய கால அவகாசம் கோரினார். எனினும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கால அவகாசம் வழங்கமுடியாது எனத் தெரிவித்து சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர். இதனால் சசிகலா சென்னையிலிருந்து கார் மூலம் பெங்களூர் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.