குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கேப்பாபுலவு காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விரைவில் காணிகளை விடுவிப்பதாக இராணுவத் தளபதி ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கேப்பாபுலவில் மக்களின் காணிகளை இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்ற நிலையில் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.