குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கால அவகாசம் வழங்குவதாக இருந்தால், ஐ.நாவின் நேரடி கண்காணிப்பிலேயே வழங்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். யாழில்.இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்திந்த வேளை அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
கால அவகாசத்தினை கொடுக்கும் போது இவ்வளவு காலமும் எடுத்த நடவடிக்கைகள் எந்தளவிற்கு மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளதென ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
வாராந்தம் மற்றும் மாதாந்தம் என்ன செய்கின்றார்கள் என்பதனை ஐ.நா. அறியக்கூடியவாறு ஏதாவது ஒரு செயற்றிட்டத்தினை வகுக்க வேண்டும்.
எவ்வாறாயினும் கால அவகாசம் வழங்குவதில் தமக்கு எவ்வித உடன்பாடு இல்லை, என மேலும் தெரிவித்தார்.