163
சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சிறந்த சேவைகளை வழங்க கல்விமான்கள் முன்வரவேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கல்விமான்கள் தமது துறைகளுடன் மாத்திரம் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டுவிடக்கூடாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சமூகத்தின் பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் குரல்கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்
.
இன்று (15) முற்பகல் கேகாலை வித்தியாலயத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
Spread the love