196
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் இன்று மாலை சரண் அடைந்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்த நிலையில் சரணடைய காலஅவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்த நிலையில் இன்று பிற்பகல் சென்னையிலிருந்து புறப்பட்ட சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர்மாலை 5.15 மணியளவில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் சரண் அடைந்தனர்.
Spread the love