225
சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியமைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் சமூக வலைத்தளங்களை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கே முயற்சிக்கின்றோம் எனவும் கட்டுப்படுத்துவதற்கோ நிறுத்துவதற்கோ தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Spread the love