175
கடந்த 2008ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றதன் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த ஜமைக்காவின் உசைன் போல்ட், ஒய்வு பெறுவதை உறுதிபடுத்தியுள்ளார்.
ஓய்வு பெறுவது குறித்து முன்னதாகவே தீர்மானித்திருந்தாலும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு அமைய, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெறும் சர்வதேச தடகள போட்டிகளுடன் ஒய்வுப்பெற போவதாக அவர் அறிவித்துள்ளார்.
மேலும் தனது முடிவில் மாற்றம் இல்லை எனவும் தான் இந்த துறையில் நிறைய சாதித்து விட்டதால்; ஓய்வு பெறுவது குறித்து கவலை கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Spread the love