179
எதியோப்பிய நெடுந்தூர ஓட்ட வீரர் பைசியா லிலிசா நீண்ட இடைவெளியின் பின்னர் தமது குடும்பத்தினரை சந்தித்துள்ளார். பிரேஸிலின் ரியோ ஜெனய்ரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டித் தொடரின் மரதன் ஓட்டப் போட்டியில் வெற்றியீட்டிய பைசியா, எதியோப்பிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு சைகை மூலம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் எதியோப்பியாவிற்கு செல்ல முடியாது அமெரிக்காவில் சரணாகதி அடைந்திருந்த நிலையில் சில மாதங்களின் பின்னர் பைசியா, தனது மனைவி மற்றும் பிள்ளைகளை சந்தித்துள்ளார்.
உரிமைகளுக்காக குரல் கொடுப்பதனை நிறுத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love