177
கட்டாரில் உபர் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். கட்டணக் குறைப்பிற்கு எதிராக இவ்வாறு போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
உபர் டாக்ஸி சேவையில் பணியாற்றி வரும் நூற்றுக் கணக்கான சாரதிகள் இவ்வாறு பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டில் இரண்டாவது தடவையாக இவ்வாறு சாரதிகள் போராட்டம் நடத்துகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் உபர் போக்குவரத்துச் சேவை போட்டி காரணமாக பயணக் கட்டணங்களை குறைத்துள்ளது.
Spread the love