ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய விரும்புகின்றது என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்கனவே சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் பொருளாதாரத்தை ஜனாதிபதி முழுமையாக பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரச சொத்துக்களை விற்பனை செய்ய முயற்சித்து வருவதாகவும் சட்டம் ஒரு நபரின் தனிப்பட்ட சொத்தாக மாறியுள்ளதாகவும் சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் அப்பாவி சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.