171
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளைக் குறி வைத்து துருக்கி படைகள் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரிய மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் சிரியாவின் அல் பாப் பகுதியில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் 10 பேர் சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சிரிய மனித உரிமை ஆணையத்தின் இந்தக் குற்றச்சாட்டை துருக்கி ராணுவம் மறுத்துள்ளதுடன் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தீவரவாதிகள் எனவும் தெரிவித்துள்ளது.
Spread the love