வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மட்டுமே கோரி வருகின்றார் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் ஏற்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எவ்வித பயங்கரவாத செயற்பாடுகளும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கம் மாகாண அரசாங்கங்களுக்கு போதிளவு நிதிகளை வழங்க வேண்டியது அவசியமானது எனவும் மாகாண சபைகள் நேரடியாக சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுவது உசிதமாகாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழு அளவிலான அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்குமாறு விக்னேஸ்வரன் மட்டுமே கோரி வருவதாகவும் கிழக்கு மாகாணத்தில் அவ்வாறான கோரிக்கைகள் எழவில்லை எனவும் சமஸ்டி அல்லது கடும்போக்குடைய எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.