மனித உரிமை விவகாரங்கள் காரணமாக மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என கொழும்பின் பிரபல பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு போன்ற நிறுவனங்களினால் பின்பற்றப்படும் சட்டங்கள் காரணமாக மாணவர்களின் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கொழும்பின் சில பிரபல பாடசாலைகளின் மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்றிருந்த மோதல் சம்பவம் குறித்து கல்வி அமைச்சர் பாடசாலை அதிபர்களை அழைத்து விசாரணை நடத்தியிருந்தார். இதன் போதே சட்டங்களினால் தாம் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அதிபர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, மாணவர்களின் ஒழுக்கத்தை நிலைநாட்ட ஓர் வலுவான பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.