நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி வடக்கையும், கிழக்கையும் இணைப்பது சாத்தியமாகாது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் எவ்விதமாக ஆர்ப்பாட்டம் செய்தாலும் அதனூடாக வடக்கையும், கிழக்கையும் ஒன்றிணைப்பது சாத்தியமாகாது எனவும் இரண்டு மாகாணங்களையும் இணைப்பதற்கு முஸ்லிம் மக்கள் எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இரு மாகாணங்களையும் இணைக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற வேண்டும் என்பதனால் அது சாத்தயமற்றது எனத் தெரிவித்த அவர் எனவே வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற விடயத்தை கைவிட்டு, பிரச்சினைகளுக்கு மாற்றுத் தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.