கடலுக்கு அடியில் புதிய கண்டம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கண்டம் எவ்வாறு உருவானது என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறன.
உலகில் தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா என உள்ள 6 கண்டங்களுக்கு மேலதிகமாக உள்ள புதிய கண்டத்தையே விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இது தென்பசிபிக் கடலுக்கு அடியில் தற்போதுள்ள நியூசிலாந்துக்கு அடியில் கடலுக்குள் மூழ்கியிருப்பதாகவும் இந்த புதிய கண்டத்துக்கு ‘ஷிலாண்டியா’ என்று பெயரிடப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கண்டமானது நியூசிலாந்தை போன்று 3 மடங்கு பெரியது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.