சட்ட மன்றத்தில் தாக்கப்பட்டமை தொடர்பில் எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் ஆளுனரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்போது, தி.மு.கவின் உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாகவும் மேலும் தன்னுடைய சட்டை கிழிக்கப்பட்டதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மெரினா கடற்கரையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சட்டசபையில் தாக்கி சட்டையை கிழித்து ஸ்டாலின் உட்பட திமுக சட்டசபை உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனைக் கண்டித்து மெரினா கடற்கரையில் உள்ள காந்திசிலை அருகே ஸ்டாலின் உட்பட திமுகவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். கிழிந்த சட்டையுடன் ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் மற்றும் திமுக சட்டசபை உறுப்பினர்கள், மெரினாவில் உண்ணாவிரதத்தை தொடங்கிள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் எம்பி கனிமொழி உட்பட திமுக தொண்டர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். திமுகவினரின் இந்த திடீர் உண்ணாவிரதத்தால் மெரினா கடற்கரை சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டசபையில் திட்டமிட்டு தாக்கினார்கள் – ஆளுனரிடம் முறையிடுவோம் – ஸ்டாலின்
சட்டசபையில் தானும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தாக்கப்படதாகவும் தங்களை அடித்து, உதைத்து சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள் என எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து ஆளுநரிடம் நேரில் சந்தித்து புகார் கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இருந்து ஆடை கிழிக்கப்பட்ட நிலையில் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவைக்காவலர்கள் தங்களை சப்பாத்துக் காலால் உதைத்து, துன்புறுத்தியதாகவும் நம்பிக்கை வாக்கெடுப்பு நேர்மையாக நடைபெறவில்லை எனவும் தொிவித்த அவா் எனவே இதுகுறித்து ஆளுநரிடம் புகார் அளிக்க செல்கிறேன் எனத் தொிவித்துள்ளாா்.