போர்க் குற்ற விசாரணைகள் குறித்த ஐ.நா. தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் முன்னெடுக்கப்படக் கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் திடீரென ஜெனீவாவிற்கு சென்ற சுமந்திரன், காலை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திலும் பின்னர் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐ.நா.வுக்கான பிரதிநிதிகளுடனும் சந்திப்புக்களை நடத்தியிருந்தியிருந்தார்.
இதன்போதே அவர் ஐ.நா.வினால் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சீர்க்குலைக்கச் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்குதல் உள்ளிட்டவற்றில் மாற்றங்களைச் செய்ய முயற்சிப்பதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ள அவர் போர்க்குற்ற விசாரணைகள் குறித்த ஐ.நா. தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் முன்னெடுக்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
1 comment
தர்மம் என்பார் நீதி என்பார் , தரம் என்பார் , சரித்திரத்து சான்ற்று சொல்வார், தாயன்பு பெட்டகத்தை சந்தியிலெ வீசிவிட்டு தன்மான வீரர் என்பார், மர்மாய் சதிபுரிவார் வாய் வீச்சால் அவலைகலின் வாழ்வுக்கு நஞ்சுவைப்பான். கல்யானசுந்தரம் சும்மாவா எழுதினார் இப்பாடலை , காக்கைவன்னியர் கூட்டத்தை மனதில் நினைத்து தான் எழுதியிருப்பார். ராஜன்.