வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்வது தொடர்பில் எவரும் அச்சமடையத் தேவையில்லை எனவும் நிர்ணயம் செய்யப்பட்ட ஒர் அளவிற்கு மட்டுமே அரிசி இறக்குமதி செய்யப்படும் எனவும் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான அளவு அரிசி இருக்குமாயின் அரசாங்கம் ஒருபோதும் இறக்குமதிக்கு அனுமதி வழங்காது என சுட்டிக்காட்டியுள்ள அவர் இவ்வாறு இறக்குமதி செய்யும் போதிலேயே உரிய விலையில் அதனை நுகர்வோருக்கு வழங்க முடியும் எனவும் அதனாலேயே இறக்குமதி செய்பய்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
அரிசியை பதுக்குவோர் தொடாபில் 1977 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.