களுத்துறை – கட்டுக்குறுந்த படகு விபத்திற்கான காரணம் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ஏற்றிச்செல்லபட்டமையே என தென்மாகாண காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது குறித்த படகில் 41 பேர் பயணித்துள்ளனர்.
இதேவேளை, கட்டுக்குறுந்த படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி தமது கவலையை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறி;பிடப்பட்டுள்ளது.
களுத்துறை, கட்டுகுருந்த படகு விபத்தில்; இதுவரையில் சிறுவர் ஒருவர் உட்பட்ட 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் 26 பேர் பேருவள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 6 பேர் களுத்துறை நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஒருவர் தொடர்ந்தும் காணாமல் போன நிலையில் உள்ளதாகவும் இன்றைய தினம் மீண்டும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு 2 – களுத்துறை படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
Feb 19, 2017 @ 14:21
களுத்துறை பேருவளை கடற்பகுதியில் உள்ள சிறிய தீவில் இருக்கும் மத வழிபாட்டு தலத்திற்கு சென்ற யாத்திரிகள் படகு விபத்துக்கு உள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 அதிகரித்துள்ளது.
மேலும் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறையில் மத வழிபாட்டிற்கு சென்றவர்களின் படகு விபத்து. 7 பேரின் சடலம் மீட்பு.
களுத்துறை பேருவளை கடற்பகுதியில் உள்ள சிறிய தீவில் இருக்கும் மத வழிபாட்டு தலத்திற்கு சென்ற யாத்திரிகள் படகு விபத்துக்கு உள்ளானதில் 20 க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
தற்போது கடலில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது. இதுவரை 7 பேரின் சடலங்கள் மீட்கபட்டு உள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.