165
அர்ஜென்டினாவில் சுற்றுலாப் பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில்; 19 பேர் உயிரிழந்துள்ளனர். சிலியின் எல்லைப்பகுதியில் உள்ள மென்டோஷா மாகாணத்தில் அமைந்துள்ள அகான் காகுவா என்ற மலைப்பகுதி சுற்றுலா தலத்துக்கு சென்ற நிலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பேரூந்து மலைப்பகுதியின் வளைவொன்றில் திரும்பிய வேளையில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 3 பேர் குழந்தைகளாவர். விபத்துக்கு அபாயகரமான வளைவே காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love