163
முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாடசாலை மாணவர்களும் வீதியில் இறங்கி போராடினார்கள்.
கேப்பாபுலவில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி அப்பகுதி மக்கள் கடந்த 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்நிலையில் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாண பாடசாலை மாணவர்கள் காலை 7.30 தொடக்கம் 8.30 மணி வரையில் ஒரு மணி நேர கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Spread the love