நாடு என்ற ரீதியில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியது அவசியமாகின்றது என அமைச்சர் லாக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டாலும் அதிகாரங்கள் உரிய முறையில் பகிரப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெறும் ஆவணங்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு திட்டமொன்றே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ள அவர், 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென முதன் முதலாக கூறியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்தின் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளும் இனவாத்தை முன்னிலைப்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள முயற்சித்ததாகக் கூறிய அவர், 13ம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டாலும் அதிகாரங்கள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.