சர்வதேச ஆயுத விற்பனை எப்போதும் இல்லாத அளவு இப்போது அதிகரித்து காணப்படுவதாக புதியதொரு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
2012 முதல் 2016 வரையான காலப்பகுதியிலான முக்கிய ஆயுதங்களின் உலக அளவிலான மொத்த இறக்குமதியானது இந்த காலத்திற்கு முந்தைய 5 ஆண்டு காலத்தோடு ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஸ்டாக்ஹோம் என்ற சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஒட்டு மொத்த ஆயுத கொள்முதலில் மூன்றில் ஒரு பகுதியை மத்திய கிழக்கு நாடுகளும், வளைகுடா நாடுகளும் செய்துள்ளதாகவும் உலகிலேயே இந்தியாவுக்கு அடுத்ததாக ஆயுதங்கள் அதிகமாக இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக சௌதி அரேபியா மாறியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுத விற்பனையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐந்து நாடுகளும் 75 சதவீத ஆயுத ஏற்றுமதியை வழங்கியிருப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.